உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தலில் மோதல்கள்
உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தலில் மோதல்கள்
உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தலில் மோதல்கள்
ADDED : ஜூலை 11, 2024 01:18 AM
புதுடில்லி,தமிழகத்தின் விக்கிரவாண்டியுடன், மேலும் ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த, 12 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத் தேர்தல் நடந்தது. இதில், மேற்கு வங்கம் மற்றும் உத்தரகண்டில் மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
தமிழகத்தின் விக்கிரவாண்டியுடன், நாடு முழுதும் காலியாக உள்ள, 12 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது.
ஆறு மாநிலங்களில் இந்தத் தேர்தல் நடந்தது. லோக்சபா தேர்தலுக்குப் பின் நடந்த இந்த இடைத் தேர்தலில், ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்குர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்கத்தில் நான்கு, ஹிமாச்சலில் மூன்று, உத்தரகண்டில் இரண்டு, பீஹார், மத்திய பிரதேசம், பஞ்சாபில் தலா ஒரு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் வென்றதால், எம்.எல்.ஏ., பதவியை சிலர் ராஜினாமா செய்ததாலும், சில இடங்களில் எம்.எல்.ஏ.,க்களின் மறைவையடுத்தும், இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
நாளை மறுதினம் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில் அமைதியான முறையில் ஓட்டுப் பதிவு நடந்தது.
அதே நேரத்தில், மேற்கு வங்கம் மற்றும் உத்தரகண்டின் சில இடங்களில், கட்சியினர் இடையே மோதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.