கோவில் விழாவில் மோதல்; 3 பேருக்கு கத்திக்குத்து
கோவில் விழாவில் மோதல்; 3 பேருக்கு கத்திக்குத்து
கோவில் விழாவில் மோதல்; 3 பேருக்கு கத்திக்குத்து
ADDED : மார் 11, 2025 11:39 PM
பாலக்காடு; பாலக்காடு அருகே, இளைஞர்கள் இடையே நடந்த மோதலில், மூன்று பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் பாலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஷ்ணு, 26, சினூராஜ், 27, வினீத், 26 உள்ளிட்ட நண்பர்கள், நேற்று முன்தினம் சினக்கத்தூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளனர்.
கோவில் அருகே உள்ள வயல் வரம்பில் பேசிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்தவர்கள் இவர்கள் முகத்தில் டார்ச்லைட் அடித்துள்ளனர். இதை தட்டி கேட்ட போது, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், விஷ்ணு, சினூராஜ், வினீத் ஆகியோரை கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த அவர்களை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஒற்றைப்பாலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, 10 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.