வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு மேலும் ரூ.10 கோடியை மீட்டது சி.ஐ.டி.,
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு மேலும் ரூ.10 கோடியை மீட்டது சி.ஐ.டி.,
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு மேலும் ரூ.10 கோடியை மீட்டது சி.ஐ.டி.,
ADDED : ஜூன் 29, 2024 11:05 PM
பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், வெவ்வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்ட, மேலும் 10 கோடி ரூபாயை, சி.ஐ.டி., அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பெங்களூரு, வசந்த்நகரில் உள்ள கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்தவர் சந்திரசேகர், 52. இவர் கடந்த மாதம் 27ம் தேதி, தனது வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்திற்கு அரசு ஒதுக்கிய 187 கோடி ரூபாய் நிதியில், 87 கோடி ரூபாய், வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டு இருப்பதாக, கடிதம் எழுதி இருந்தார்.
இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு மாற்றியது. விசாரணையில் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் ஐ.டி., நிறுவனங்கள், மதுபான பார், நகைக்கடைகளின் 193 வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டது தெரிந்தது.
முதற்கட்டமாக 18 கோடி ரூபாய் பணத்தை, சி.ஐ.டி., அதிகாரிகள் மீட்டனர். மேலும் 69 கோடி ரூபாய் பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் 10 கோடி ரூபாய் பணத்தை, சி.ஐ.டி., அதிகாரிகள் மீட்டுள்ளனர்.