கர்நாடக எம்.பி.,க்களுடன் 28ல் முதல்வர் ஆலோசனை
கர்நாடக எம்.பி.,க்களுடன் 28ல் முதல்வர் ஆலோசனை
கர்நாடக எம்.பி.,க்களுடன் 28ல் முதல்வர் ஆலோசனை
ADDED : ஜூன் 24, 2024 04:52 AM
பெங்களூரு : கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ., - காங்., - ம.ஜ.த.,வின் 28 எம்.பி.,க்களுடன் முதல்வர் சித்தராமையா வரும் 28ல் ஆலோசனை நடத்த உள்ளார். இவர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்ய, மத்திய அரசு தயாராகி வருகிறது.
இந்த பட்ஜெட்டில், புதிய திட்டங்களை கர்நாடக அரசு எதிர்பார்க்கிறது.
மத்திய பட்ஜெட், மத்திய அரசிடம் இருந்து, மாநிலத்துக்கு வர வேண்டிய நிதியுதவி, ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, நீர்ப்பாசனம் உட்பட, பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க, கர்நாடகாவின் 28 எம்.பி.,க்கள், மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களுடன் ஜூன் 28ல், டில்லியில் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்த உள்ளார்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் மட்டுமின்றி, பா.ஜ., - ம.ஜ.த., எம்.பி.,க்களும் பங்கேற்கும்படி, முதல்வர் அலுவலகத்தில் இருந்து, அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 27ல் எம்.பி.,க்களுக்கு புதுடில்லியில் முதல்வர் சார்பில், விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.