பா.ஜ.,வுக்கு ஆதரவில்லையாம் முதல்வர் சித்தராமையா கணக்கு
பா.ஜ.,வுக்கு ஆதரவில்லையாம் முதல்வர் சித்தராமையா கணக்கு
பா.ஜ.,வுக்கு ஆதரவில்லையாம் முதல்வர் சித்தராமையா கணக்கு
ADDED : ஜூன் 16, 2024 07:32 AM

மைசூரு: ''மத்திய அமைச்சரவையில் எட்டு எம்.பி.,க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும், தென் மாநிலங்களில் பா.ஜ.,வை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரு நகரில் தனது இல்லத்தில் நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:
மத்திய அமைச்சரவையில் எத்தனை அமைச்சர் பதவி கொடுத்தாலும், ஆர்.எஸ்.எஸ்., என்ற அடித்தளம் கொண்ட கட்சி, ஆர்.எஸ்.எஸ்., என்ற முகமூடி அணிந்த கட்சிக்கு, தென் மாநிலங்களில் பா.ஜ.,வை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
இம்முறை வட மாநிலங்களில் சில இடங்களில் பின்னடைவை பா.ஜ.,வினர் சந்தித்துள்ளனர். 'நீட்' தேர்வில் சில மாணவர்களுக்கும், ரேங்க் எடுத்தவர்களுக்கும் பாதிப்பு நிகழ்ந்துள்ளது.
காங்., - எம்.பி., ராகுல், துணை முதல்வர் சிவகுமார், என் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு அனுப்பப்படவில்லையா? இது வெறுப்பு அரசியலா? நாங்கள் வெறுப்பு அரசியல் செய்ய மாட்டோம்.
பொறியியல் கல்லுாரி கட்டண உயர்வு குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.