காய்ந்த மிளகாய் ஆதரவு விலை உயர்த்த முதல்வர் கோரிக்கை
காய்ந்த மிளகாய் ஆதரவு விலை உயர்த்த முதல்வர் கோரிக்கை
காய்ந்த மிளகாய் ஆதரவு விலை உயர்த்த முதல்வர் கோரிக்கை
ADDED : மார் 12, 2025 05:58 AM
பெங்களூரு; காய்ந்த மிளகாய்க்கு வழங்கும் ஆதரவு விலையை உயர்த்தி வழங்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.
நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு அவர் எழுதிய கடிதம்:
கல்யாண் கர்நாடகா பகுதியில் விளையும் காய்ந்த மிளகாயின் விலை, கடும் சரிவை சந்தித்து உள்ளது. இதனால், விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஒரு குவிண்டால் காய்ந்த மிளகாய் உற்பத்தி செய்வதற்கு 12,675 ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
தற்போது ஒரு குவிண்டால் மிளகாய் 8,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஆந்திராவின் குண்டூர் பகுதியின் காய்ந்த மிளகாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாக, குவிண்டாலுக்கு 11,781 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது பாராட்டுக்குரியது. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை 13,500 ரூபாயாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு, முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.