வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்
வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்
வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்
ADDED : ஜூலை 07, 2024 01:30 AM
புதுடில்லி, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 22ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 12 வரை நடக்கிறது. மத்திய பட்ஜெட், 23ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, எம்.பி.,க்கள் பதவியேற்பு மற்றும் சபாநாயகரை தேர்வு செய்வதற்காக பார்லிமென்ட் கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்தது.
லோக்சபா தேர்தலுக்கு முன், பிப்., 1ல் இடைக்கால பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நடப்பு, 2024 - 2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், வரும், 22ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 12 வரை நடக்க உள்ளதாக, மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, 23ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதன் வாயிலாக, தொடர்ந்து, ஏழாவது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று, குறிப்பிட்டிருந்தார்.
சமூக மற்றும் பொருளா தாரத்தை முன்வைத்து இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கும் என்றும், அவர் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமரான பின், தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.