ஒடிசாவில் 67 இடங்களில் சி.பி.ஐ., ரெய்டு
ஒடிசாவில் 67 இடங்களில் சி.பி.ஐ., ரெய்டு
ஒடிசாவில் 67 இடங்களில் சி.பி.ஐ., ரெய்டு
ADDED : ஜூன் 14, 2024 12:25 AM
புதுடில்லி, நாடு முழுதும் கடந்த ஆண்டு ஜனவரி 27ல் தபால்துறையில் 1,382 தபால்காரர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
குறைந்தபட்ச தகுதியாக 10 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், உள்ளூர் மொழியை பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பம், 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு ஒடிசா மண்டலத்தில் பாலேஸ்வர், மயூர் பஞ்ச், கலாஹண்டி, பர்ஹாம்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து விண்ணப்பித்த 63 பேர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக போலிச் சான்றிதழை சமர்ப்பித்தது தபால்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
இதுகுறித்து சி.பி.ஐ., யில் தபால் துறை புகார் அளித்தது.
இதையடுத்து ஒடிசாவில் நேற்று 67 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 122 சி.பி.ஐ., அதிகாரிகள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த 82 அதிகாரி என 204 அதிகாரிகள் ஈடுபட்டனர்.