டில்லி மெட்ரோ பவனுக்கு 'கார்பன் நியூட்ரல்' சான்றிதழ்
டில்லி மெட்ரோ பவனுக்கு 'கார்பன் நியூட்ரல்' சான்றிதழ்
டில்லி மெட்ரோ பவனுக்கு 'கார்பன் நியூட்ரல்' சான்றிதழ்
ADDED : ஜூன் 06, 2024 02:36 AM

புதுடில்லி:உலக சுற்றுச்சூழல் தினத்தில், டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டடமான மெட்ரோ பவனுக்கு 'கார்பன் நியூட்ரல்' சான்றிதழ் கிடைத்துள்ளது.
வரும் 2070ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வே இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக அரசின் ஒவ்வொரு துறையும் பயணம் செய்து வருகின்றன.
அந்த வகையில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக நோடியா செக்டார் 50ல் உள்ள மெட்ரோ ரயில் ஊழியர் குடியிருப்பு, முதன் முறையாக 'கார்பன் நியூட்ரல்' சான்றிதழைப் பெற்றது.
ஒரு குடியிருப்போ அல்லது அலுவலகமோ பல்வேறு வகைகளில் உமிழப்படும் கார்பனை அழித்துவிடுவதே 'கார்பன் நியூட்ரல்' எனப்படும். அந்த வகையில் மெட்ரோ ரயில் ஊழியர் குடியிருப்புக்கு 'கார்பன் நியூட்ரல்' சான்றிதழ் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகம் இயங்கி வரும் மெட்ரோ பவனுக்கு 'கார்பன் நியூட்ரல்' சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்த சான்றிதழை கார்பன் உமிழ்வு குறித்து சர்வதேச அளவில் ஆய்வு செய்து வரும் 'எர்த்துாட்' என்ற சர்வதேச நிறுவனம் வழங்கியுள்ளது.
நம் நாட்டில் குருகிராமில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கிலாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயல்படுகிறது.