சிறுவன் பலி அதிர்ச்சியில் பாட்டி மரணம்
சிறுவன் பலி அதிர்ச்சியில் பாட்டி மரணம்
சிறுவன் பலி அதிர்ச்சியில் பாட்டி மரணம்
ADDED : ஜூன் 22, 2024 01:06 AM
திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரைச் சேர்ந்தவர் அப்துல் கபூர். இவரது மகன் முகமது சீனான், 9, நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளிவாசலுக்கு சென்றபோது, சிறிது நேரத்தில் சிறுவன் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு தானியங்கி கதவில் சிக்கி மயங்கி கிடப்பதாக தகவல் வந்தது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதற்கிடையே சீனானை பார்ப்பதற்காக கபூரின் தாய் ஆசியா, 51, மருத்துவமனைக்கு சென்றபோது, சீனான் இறந்த தகவல் தெரிந்து மயங்கி விழுந்து அவரும் இறந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.