ADDED : மே 04, 2026 08:41 PM
காங்., தலைவர்களுக்கு
முதல்வர் அழைப்பு
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பா.ஜ. அரசு செய்த மக்கள் நலப் பணிகள் மற்றும் வடகிழக்கு மாநில வளர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி செலுத்திய தீவிர கவனத்துக்காக, அசாம் மக்கள் பா.ஜ., ஆட்சி தொடர வாய்ப்பு அளித்துள்ளனர்.
பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு இது ஒரு வரலாற்று வெற்றி. அசாமில் பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெறுவது இதுவே முதல் முறை.
பாடகர் ஜூபின் கார்க் மரணத்தை அரசியலாக்கிய காங்கிரசுக்கு மக்கள் இந்த தேர்தலில் தண்டனை வழங்கி விட்டனர்.
எதிர்க்கட்சியில் ஒன்று அல்லது இரண்டு பேரை தவிர வேறு ஹிந்து எம்.எல்.ஏ.,க்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அசாம் மாநில வளர்ச்சிக்காகவும், வங்கதேச மியாக்களின் ஊடுருவலை எதிர்த்து போராடவும், காங்கிரசில் உள்ள ஹிந்து தலைவர்கள் பா.ஜ.,வில் இணைய வேண்டும். சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை இந்தியா ஒரு ஹிந்து தேசமாகவே நீடிக்கும்.





