ADDED : ஆக 03, 2024 12:21 AM
புதுடில்லி:தெற்கு டில்லி கிரேட்டர் கைலாசில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு வந்த மின்னஞ்சலில், பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
நேற்று காலை பள்ளி அலுவலக ஊழியர் அந்த மின்னஞ்சலை படித்து, நிர்வாகிகளிடம் கூறினார். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சகிதமாக போலீசார் வந்தனர். பள்ளி முழுதுன் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை. இது வெறும் மிரட்டல் என்பதை போலீசார் உறுதி செய்தனர். மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை நடக்கிறது.