'பிளாக்மெயிலர்' கொலை: அக்கா, தம்பி கைது
'பிளாக்மெயிலர்' கொலை: அக்கா, தம்பி கைது
'பிளாக்மெயிலர்' கொலை: அக்கா, தம்பி கைது
ADDED : ஜூன் 12, 2024 11:09 PM
மைசூரு: பெண்ணை, 'பிளாக்மெயில்' செய்த நபரை கொலை செய்த அக்கா, தம்பி கைது செய்யப்பட்டனர்.
மைசூரின், கியாதமாரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரேமா, 38. இவருக்கும், நஞ்சன்கூடின், ஸ்ரீராம்புராவில் வசிப்பவருக்கும், 15 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மாதத்துக்கு முன், பிரேமாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின், கணவரின் நண்பரான ஹெச்.டி.கோட்டேவின், சித்தையனஹுன்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், 32, என்பவருடன், பிரேமாவுக்கு அறிமுகம் கிடைத்தது. இது கள்ளத்தொடர்பாக மாறியது. சில நாட்களுக்கு முன், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராஜேஷை விட்டு பிரேமா விலக துவங்கினார்.
இதனால் கோபமடைந்த ராஜேஷ், பிளாக்மெயில் செய்ய துவங்கினார். இதே காரணத்தால், நேற்று முன்தினம் ராஜேஷுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது, அவரை சிமென்ட் கல்லால் அடித்து பிரேமாவும், அவரது தம்பி சிவுவும் கொலை செய்தனர். அக்கா, தம்பி கைது செய்யப்பட்டனர்.