தண்ணீர் பிரச்னையில் பா.ஜ., போர்க்கோலம்
தண்ணீர் பிரச்னையில் பா.ஜ., போர்க்கோலம்
தண்ணீர் பிரச்னையில் பா.ஜ., போர்க்கோலம்
ADDED : ஜூன் 18, 2024 06:41 AM

புதுடில்லி : மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு காரணமான ஆம் ஆத்மி அரசை கண்டித்து, பல்வேறு பகுதிகளில் பா.ஜ., தலைவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீதா காலனியில் பா.ஜ., மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அழுக்கு தண்ணீர் பாட்டில்களையும் காலி மண்பானைகளையும் ஏந்தி, அக்கட்சியின் போராட்டம் நடத்தினர்.
ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, மண்பானைகளை உடைத்து கண்டனம் தெரிவித்தனர்.
அங்கு வீரேந்திர சச்தேவா பேசியதாவது: யமுனையில் டில்லியின் முழுப் பங்கையும் ஹரியானா அரசு திறந்து விட்டுள்ளது. டில்லிக்குள் யமுனை நுழைந்த பிறகு டேங்கர் மாபியாவால் தண்ணீர் திருடப்படுகிறது. டேங்கர் மாபியாவுடன் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அவர்களுடன் கைகோர்த்து உள்ளனர்.
மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கும் வரை, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக டில்லி பா.ஜ., தொடர்ந்து போராட்டம் நடத்தும். கடந்த 10 ஆண்டுகளாக அக்கட்சி ஆட்சியில் இருந்த போதிலும், மக்கள் அசுத்தமான தண்ணீரையே பெறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
பிற இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் கட்சியின் எம்.பி.,க்கள் மனோஜ் திவாரி, பன்சூரி சுவராஜ், ராம்வீர் சிங் பிதுரி, பிரவீன் கந்தேல்வால், யோகேந்திர சந்தோலியா ஆகியோர் கலந்து கொண்டனர்.