கே.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை மாற்றும்படி பா.ஜ., வலியுறுத்தல்
கே.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை மாற்றும்படி பா.ஜ., வலியுறுத்தல்
கே.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை மாற்றும்படி பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 20, 2024 06:40 AM

பெங்களூரு: ''கர்நாடக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மற்றும் மத்திய அரசின் வங்கித் தேர்வு ஒரே நாளில் நடப்பதால், குழப்பம் ஏற்படும். தேர்வு அட்டவணையை மாற்றுங்கள்,'' என பா.ஜ., உறுப்பினர் தனஞ்செயா சர்ஜிவலியுறுத்தினார்.
கர்நாடகா மேலவை பூஜ்ய நேரத்தில், நேற்று அவர் கூறியதாவது:
கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும், உயர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 25ல், நடக்க உள்ளது. இதே நாளன்று மத்திய அரசின் பாங்கிங் தேர்வும் நடக்கவுள்ளது. ஒரே நாளில் நடக்கும் இரண்டு தேர்வுகளால், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு குழப்பம் ஏற்படும்.
நமது எதிர்பார்ப்பின்படியே, இம்முறைகன்னடத்தில் வங்கி தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது பொன்னான வாய்ப்பாகும். ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் நடந்தால், வேலை எதிர்பார்க்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர், இளம் பெண்களுக்கு எந்த தேர்வை எழுதுவது என்ற குழப்பம் ஏற்படும்; வாய்ப்பு கை நழுவும். எனவே தேர்வு அட்டவணையை மாற்றுங்கள்.
தேர்வு தேதியை முடிவு செய்யும் முன், மத்திய அரசின் முக்கியமான தேர்வுகளை கவனத்தில் கொண்டு, மாநில அரசு தேர்வு அட்டவணையை தயாரிக்க வேண்டும். இதன் மூலம் மாநிலத்தின் வேலையில்லா பட்டதாரிகளின் நலனை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.