Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பா.ஜ.,வுக்கு ஹிந்து மத கொள்கைகள் புரியவில்லை: ராகுல் விமர்சனம்

பா.ஜ.,வுக்கு ஹிந்து மத கொள்கைகள் புரியவில்லை: ராகுல் விமர்சனம்

பா.ஜ.,வுக்கு ஹிந்து மத கொள்கைகள் புரியவில்லை: ராகுல் விமர்சனம்

பா.ஜ.,வுக்கு ஹிந்து மத கொள்கைகள் புரியவில்லை: ராகுல் விமர்சனம்

ADDED : ஜூலை 04, 2024 01:23 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி, “வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் பா.ஜ.,வினருக்கு, ஹிந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகள் புரியவில்லை,” என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., மூத்த தலைவருமான ராகுல் விமர்சித்துள்ளார்.

காங்., - எம்.பி., ராகுல், எதிர்க்கட்சி தலைவரான பின், புதிய லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரில் முதன் முறையாக சமீபத்தில் பேசினார். அப்போது, பிரதமர் மோடி, பா.ஜ., மீது கடுமையான குற்றச்சாட்டுகளை, அவர் முன்வைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தின் ஆமதாபாதில், காங்., அலுவலகம் முன், நேற்று முன்தினம் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது, காங்., தொண்டர்களுக்கும், பா.ஜ.,வினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். வன்முறைக் களமாக அப்பகுதி மாறியது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.

இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட பதிவு:

குஜராத்தில், காங்., அலுவலகத்தின் மீதான கோழைத்தனமான மற்றும் வன்முறை தாக்குதல், பா.ஜ., மற்றும் சங்பரிவார் பற்றிய என் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

வன்முறையையும், வெறுப்பையும் பரப்பும் பா.ஜ.,வினர், ஹிந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை. சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு குஜராத் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். அங்கு, 'இண்டியா' கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

'உருப்படியாக ஒன்றுமில்லை'

டில்லியில், காங்., - எம்.பி., கவுரவ் கோகோய் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:'லோக்சபாவில் பிரதமர் மோடி பேசுவதற்கு முன், அவுட்டர் மணிப்பூர் எம்.பி., ஆல்பிரட் ஆர்தரை பேச அனுமதிக்க வேண்டும்' என, ராகுலும், காங்., - எம்.பி.,க்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்கவில்லை.இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பிரதமர் மோடி பேசினார். ஆனால், மணிப்பூரின் அவலநிலை குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வழக்கம் போல், காங்., மீது குற்றச்சாட்டு, கேலி, கிண்டல் மட்டுமே அவர் செய்தார். உருப்படியான ஒன்றை கூட மோடி பேசவில்லை. மணிப்பூரில் நிலவும் சூழ்நிலையைக் கேட்கக்கூட அவருக்கு பொறுமை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us