பீகார்: சி.பி.ஐ.,க்கு நவாடா கிராம மக்கள் "செமகவனிப்பு": அதிகாரிகள் திக்கு முக்கு
பீகார்: சி.பி.ஐ.,க்கு நவாடா கிராம மக்கள் "செமகவனிப்பு": அதிகாரிகள் திக்கு முக்கு
பீகார்: சி.பி.ஐ.,க்கு நவாடா கிராம மக்கள் "செமகவனிப்பு": அதிகாரிகள் திக்கு முக்கு
ADDED : ஜூன் 23, 2024 10:48 PM

பாட்னா: யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரிக்க சென்ற சிபிஐக்கு நவாடா கிராம மக்கள் சிறப்பாக செய்த செம கவனிப்பில் திககுமுக்காடினர்.
நாடு முழுவதிலும் யுஜிசி நெட் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சர்ச்சையையும் உருவாக்கியது. தொடர்ந்து மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
வினாத்தாள் கசிவு சம்பவத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சிபிஐ., அதிகாரிகள் நவாடா கிராமத்திற்கு சென்றனர். ஆனால் சிபிஐ குழுவினர் போலியானவர்கள் என நினைத்த கிராமத்தினர் தங்களது பாணியில் சிறப்பாக 'செம கவனிப்பு' நடத்தி உள்ளனர். இதனை ஒரு சிலர் வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.
கிராமத்தினரின் கவனிப்பை சமாளிக்க முடியாத அதிகாரிகள் உள்ளூர் போலீசாரின் உதவியை நாடி உள்ளனர். சமபவம் குறித்து காவல் துறை அதிகாரி அம்ப்ரிஷ் ராகுல் கூறுகையில் உள்ளூர் போலீசாரின் வருகைக்கு பின்னர் அதிகாரிகள் மீட்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீடியோ அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.