அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு பதவியேற்பு
அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு பதவியேற்பு
அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு பதவியேற்பு
ADDED : ஜூன் 14, 2024 12:23 AM

இட்டாநகர், அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பெமா காண்டு நேற்று பதவியேற்றார்.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 சட்ட சபை தொகுதிகளுக்கும், இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கும் ஏப்ரல், 19ல் தேர்தல் நடந்தது.
முன்னதாக, முதல்வராக இருந்த பெமா காண்டு உட்பட 10 பா.ஜ., வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சட்டசபை தேர்தலில் அவர்கள் 10 பேரையும் சேர்த்து, 46 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றதை அடுத்து, அங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க அக்கட்சி முடிவு செய்தது.
நேற்று முன்தினம் நடந்த பா.ஜ., கூட்டத்தில் முதல்வராக பெமா காண்டு மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பின், ஆட்சி அமைக்க கவர்னரிடம் அவர் உரிமை கோரினார்.
கவர்னர் அழைப்பு விடுத்ததை அடுத்து, அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக பெமா காண்டு நேற்று மூன்றாவது முறையாக பதவியேற்று கொண்டார்.
அவருக்கு, கவர்னர் கே.டி.பர்நாயக், பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியகாப்பு பிரமாணம் செய்து வைத்தார். அவருடன், துணை முதல்வராக சவுனா மென் உட்பட 11 எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தவாங் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர். புதிய அமைச்சரவையில் எட்டு புதிய முகங்கள் இடம் பெற்றுள்ளனர்.