Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஜம்மு - காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி

ஜம்மு - காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி

ஜம்மு - காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி

ஜம்மு - காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி

ADDED : ஜூன் 21, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீநகர், யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், இரு நாட்கள் பயணமாக, பிரதமர் மோடி நேற்று முதன்முறையாக சென்றார். ஸ்ரீநகரில், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான, 84 வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து நடந்த விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது:

ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கி நடந்து வருகின்றன. இங்குள்ள மக்கள், ஓட்டுகள் வாயிலாக அவர்கள் விரும்பும் புதிய அரசை தேர்ந்தெடுப்பர்.

மேலும், ஜம்மு - காஷ் மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜம்மு - காஷ்மீரில், சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை, மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. ஜம்மு- - காஷ்மீரின் எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

லோக்சபா தேர்தலில் இங்குள்ள இளைஞர்கள் அதிகளவில் ஓட்டளித்து, ஜனநாயகத்தின் வெற்றியை உறுதி செய்தனர்.

அவர்களுக்கு என் பாராட்டுகள். ஜம்மு - காஷ்மீரில் நிரந்தரமாக அமைதி நிலைநாட்டப்படும். அதற்கான நடவடிக்கைகள், கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ளன. இதை உலகமே பார்த்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ரீநகரில் இன்று நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us