பிஜ்வாசன் ரயில் நிலையத்தில் புதிய காவல் நிலையம் திறக்க ஒப்புதல்
பிஜ்வாசன் ரயில் நிலையத்தில் புதிய காவல் நிலையம் திறக்க ஒப்புதல்
பிஜ்வாசன் ரயில் நிலையத்தில் புதிய காவல் நிலையம் திறக்க ஒப்புதல்
ADDED : ஜூன் 20, 2024 02:35 AM
ரோஸ் அவென்யூ,:பிஜ்வாசன் ரயில் நிலையத்தில் புதிய காவல் நிலையம் திறக்க துணைநிலை கவர்ன் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ்நிவாஸ் நேற்று தெரிவித்துள்ளது.
பிஜ்வாசன் ரயில் நிலையத்தை சுற்றி இருக்கும் பகுதியில் ஏறக்குறைய 1.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் புதிய காவல் நிலையம் திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, டில்லி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் தற்போதைய எல்லைகளை சீரமைத்து பிஜ்வாசன் ரயில் நிலையத்தில் புதிய காவல் நிலையம் திறக்க திட்டமிடப்பட்டது. இதற்கு நேற்று துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ்நிவாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஜ்வாசன் ரயில் நிலையத்தின் கட்டுமானம் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது, ஒரு பெரிய முனையமாக இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.