'வரி பணம் பங்கீட்டில் அநீதி நடந்தால் முறையீடு'
'வரி பணம் பங்கீட்டில் அநீதி நடந்தால் முறையீடு'
'வரி பணம் பங்கீட்டில் அநீதி நடந்தால் முறையீடு'
ADDED : ஜூன் 18, 2024 06:32 AM

பெங்களூரு: ''கர்நாடகா மாநிலத்துக்கு வரிப்பணம் வழங்குவதில் மத்திய அரசு அநீதி இழைத்தால், உச்ச நீதிமன்றத்தில் மனு செய்வோம்,'' என கனரக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:
மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் வரி செலுத்தினாலும், அதை வினியோகிப்பதில் கர்நாடகா போன்று வளரும் மாநிலங்களுக்கு அநீதி இழைத்து வருகிறது.
இதே நிலை நீடித்தால், கர்நாடகா போன்ற மாநிலங்கள், உச்ச நீதிமன்றத்தை அணுகி, தங்கள் வரி பங்குக்காக, பொதுநல வழக்கு தாக்கல் செய்ய நேரிடும். கர்நாடகா, தமிழகம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள், வரி செலுத்துவதில் முன்னணியில் உள்ளன.
அதற்கு ஈடாக இம்மாநிலங்களுக்கு உரிய பங்கை, மத்திய அரசு வழங்கவில்லை. மாறாக உத்தர பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களுக்கு அதிக பங்கு செல்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.