பிரஜ்வல் வழக்கில் இருந்து மேலும் ஒரு வக்கீல் விலகல்
பிரஜ்வல் வழக்கில் இருந்து மேலும் ஒரு வக்கீல் விலகல்
பிரஜ்வல் வழக்கில் இருந்து மேலும் ஒரு வக்கீல் விலகல்
ADDED : ஜூன் 11, 2024 10:44 PM

பெங்களூரு : முன்னாள் எம்.பி., பிரஜ்வல் பாலியல் வழக்கில், அரசு சார்பில் வாதாடி வந்த மேலும் ஒரு வக்கீல் விலகி உள்ளார்.
ஹாசன் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. பாலியல் வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு சார்பில் ஆஜராக, மூத்த வக்கீலான ஜெகதீஷை அரசு நியமனம் செய்தது. அவருடன் கூடுதல் வக்கீல்களாக அசோக் நாயக், ஜைனா கோத்தாரி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
பிரஜ்வல் வழக்கில் இருந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, வக்கீல் ஜெகதீஷ் திடீரென விலகினார். இந்நிலையில் ஜைனா கோத்தாரியும் வழக்கில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இரு வக்கீல்கள் விலகலுக்கு சரியான காரணம் தெரியவில்லை.
பிரஜ்வல் தரப்பில் அவர்களுக்கு அழுத்தம் தரப்பட்டதா என்றும், சந்தேகம் எழுந்து உள்ளது. வழக்குக்காக புதிய வக்கீல்களை நியமிக்கும் பணியில், அரசு ஈடுபட்டு உள்ளது.