ராஜஸ்தான் போலீஸ் துறையில் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கீடு
ராஜஸ்தான் போலீஸ் துறையில் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கீடு
ராஜஸ்தான் போலீஸ் துறையில் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கீடு
ADDED : ஜூலை 27, 2024 11:33 PM

ஜெய்ப்பூர்: இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 17 - 21 வயது வரையிலான இளைஞர்கள் அக்னி வீரர்களாக சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகள் பணி வழங்கப்படுகிறது.
அதன் பின், அவர்களில் 25 சதவீதத்தினர் ராணுவத்தின் வழக்கமான பணிக்கு அழைத்துக்கொள்ளப்படுவர். மீதமிருப்பவர்களுக்கு பாதுகாப்பு படையில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது.
பல்வேறு மாநில அரசுகளும் அக்னி வீரர்களுக்கு, அரசு துறைகளில் இடஒதுக்கீடு அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, கார்கில் வெற்றி தினமான நேற்று முன்தினம் அக்னி வீரர்களுக்கு மாநில அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
குறிப்பாக, போலீஸ், சிறைத்துறை காவலர், வன காவலர் போன்ற பணியிடங்களில் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு என்ற தகவல் வெளியிடப்படவில்லை.