மன்னிப்பு கேட்காத காங்., பா.ஜ., ரவி குற்றச்சாட்டு
மன்னிப்பு கேட்காத காங்., பா.ஜ., ரவி குற்றச்சாட்டு
மன்னிப்பு கேட்காத காங்., பா.ஜ., ரவி குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 24, 2024 04:47 AM

பெங்களூரு : ''நாட்டில் அவசர சூழ்நிலையை திணித்த காங்கிரஸ், தான் செய்த தவறுக்கு 49 ஆண்டுகளாகியும் மன்னிப்பு கேட்கவில்லை,'' என பா.ஜ., - எம்.எல்.சி., ரவி குற்றம் சாட்டினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாட்டில் அவசர சூழ்நிலையை திணிக்கும் நிலை, எப்போதும் வரக்கூடாது. அந்த கறுப்பு அத்தியாயத்தை நினைத்து பார்ப்பது அவசியம்.
நாட்டில் அவசர சூழ்நிலையை திணித்த காங்கிரஸ், 49 ஆண்டுகளாகியும் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கவில்லை. 'தான் செய்தது தவறு' என்பது புரிந்தால், பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
காங்கிரஸ் தன் சுயநலத்துக்காக, என்ன வேண்டுமானாலும் செய்யும் மனநிலை கொண்டது.
இத்தகைய மனநிலை, மிகவும் அபாயமானது. நாட்டில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ், அவசர சூழ்நிலையை கொண்டு வந்து, ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தது. அது ஒரு கறுப்பு நாள்.
அன்று சித்தராமையா, காங்கிரசுடன் இருந்தாரா, இல்லையா தெரியாது. ஆனால், மல்லிகார்ஜுன கார்கே இருந்தார்.
அம்பேத்கர் வகுத்த அரசியல் சாசனத்தை, இந்திரா மிதித்தார் என்பது கார்கேவுக்கு புரிந்திருக்க வேண்டும். அவசர சூழ்நிலையை எதிர்த்து போராடிய, எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைத்தனர். பத்திரிகை சுதந்திரத்தை, அடிப்படை உரிமைகளை பறித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.