Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ முறைகேட்டை அம்பலப்படுத்திய ஆபிரஹாம் 'மூடா' : கமிஷனர் ரகு நந்தனுடன் ஆலோசனை

முறைகேட்டை அம்பலப்படுத்திய ஆபிரஹாம் 'மூடா' : கமிஷனர் ரகு நந்தனுடன் ஆலோசனை

முறைகேட்டை அம்பலப்படுத்திய ஆபிரஹாம் 'மூடா' : கமிஷனர் ரகு நந்தனுடன் ஆலோசனை

முறைகேட்டை அம்பலப்படுத்திய ஆபிரஹாம் 'மூடா' : கமிஷனர் ரகு நந்தனுடன் ஆலோசனை

ADDED : ஆக 05, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
மைசூரு : மைசூரு நகர வளர்ச்சி ஆணைய அலுவலகத்துக்கு, சமூக ஆர்வலர் ஆபிரஹாம் வருகை தந்தார். கமிஷனர் ரகு நந்தனுடன் ஆலோசனை நடத்தினார். இவரது திடீர் வருகை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் நடந்த பல்வேறு ஊழல்களை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் சமூக ஆர்வலர் ஆபிரஹாம். 'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்துள்ள முறைகேட்டையும், இவரே அம்பலமாக்கினார். மூடாவில் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான மனைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இம்முறைகேடு தொடர்பாக, முதல்வர் சித்தராமையா மீது கவர்னரிடம் ஆபிரஹாம் புகார் அளித்துள்ளார். கவர்னரும், முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சியினர் பாதயாத்திரை நடத்துகின்றனர்.

இதற்கிடையில் மைசூரில் உள்ள, மூடா அலுவலகத்துக்கு ஆபிரஹாம், நேற்று காலை திடீரென வந்தார். மூடா கமிஷனர் ரகு நந்தனுடன் ஆலோசனை நடத்தினார்.

பின், அவர் அளித்த பேட்டி

முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் மீது நான் குற்றஞ்சாட்டினால், அது உண்மை.

காங்கிரசார் பற்றி பேசினால், நான் பிளாக் மெயிலர் ஆகி விடுவேனா. எடியூரப்பா மீது குற்றஞ்சாட்டிய போது, இதே சித்தராமையா என் முதுகை தட்டி பாராட்டினார். இப்போது பிளாக்மெயிலர் என்கிறார். சமூக வலைதள பக்கங்களில், என்னை திட்டுகின்றனர்.

இது சித்தராமையா தன் தோல்வியை ஒப்புக்கொண்டதை உணர்த்துகிறது.

கடந்த 2004ல், மல்லிகார்ஜுனசாமி விவசாய நிலம் வாங்கியதாக கூறுகின்றனர். அப்போது அங்கு விவசாய நிலம் இருந்ததா. 2001ல் மேம்படுத்தப்பட்ட லே - அவுட்டாக இருந்தது. அப்படி இருக்கும் போது, 2004ல் அந்த நிலம் விவசாய நிலம் ஆனது எப்படி. காலி இடம் வாங்கி, அதை குடியிருப்பு பகுதியாக மாற்றியுள்ளனர்.

தன் தாய்க்கு நிவாரணமாக மனை கிடைக்கும் போது நடந்த முக்கியமான கூட்டங்களில் யதீந்திரா அமர்ந்திருந்தார். முதல்வர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட, 14 வீட்டுமனைகளை திரும்ப பெற வேண்டும். விதிமீறலாக மனை வழங்கியுள்ளனர்.

எனக்கு தெரிந்த வரை, மூடாவுக்கு 55 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிவகுமார் போன்ற வல்லுனர்கள், என் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். தான் எந்த தவறும் செய்யவில்லை என, முதல்வர் சித்தராமையா உரையாற்றுகிறார். நான் கூறிய குற்றச்சாட்டு தவறு என நிரூபிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us