Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ராம்நகர் பெயரை மாற்ற கூடாது ஆம் ஆத்மி தலைவர் வலியுறுத்தல்

ராம்நகர் பெயரை மாற்ற கூடாது ஆம் ஆத்மி தலைவர் வலியுறுத்தல்

ராம்நகர் பெயரை மாற்ற கூடாது ஆம் ஆத்மி தலைவர் வலியுறுத்தல்

ராம்நகர் பெயரை மாற்ற கூடாது ஆம் ஆத்மி தலைவர் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 14, 2024 03:38 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு:

'சமமான சமுதாயம் உருவாக்கும், நல்ல நோக்கம் கொண்டுள்ளதாக கூறும் முதல்வர் சித்தராமையா, பெங்களூரை மட்டும் மையப்படுத்தும் திட்டங்களை வகுத்து, ஏற்றத்தாழ்வுக்கு வழி வகுக்க கூடாது,' என மாநில ஆம் ஆத்மி தலைவர், 'முக்கிய மந்திரி' சந்துரு வலியுறுத்தினார்.

முதல்வர் சித்தராமையாவுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:

மாநில மக்களின் வரிப்பணத்தை, பெங்களூரை மட்டுமே விஸ்தரிக்க பயன்படுத்தினால், கல்யாண கர்நாடகா, மத்திய கர்நாடகா, கித்துார் கர்நாடகா பகுதி மக்கள் என்ன செய்வது. ஏற்கனவே பெரும்பாலான இளைஞர்கள், வேலைக்காக தொலைவில் உள்ள பெங்களூருக்கு பதிலாக, ஹைதராபாத், புனே, மும்பை, பனாஜி போன்ற அண்டை மாநிலங்களின் நகரங்களுக்கு செல்கின்றனர்.

பெங்களூரை மையப்படுத்தும் திட்டங்களால், இளைஞர்களை வேறு மாநிலங்களுக்கு புலம் பெயரும் சூழ்நிலை உருவாகிறது. புதிய விமான நிலையத்தை துமகூரு அல்லது ராம்நகரில் கட்ட முயற்சி நடக்கிறது. இதுவும் கூட பெங்களூரை மையப்படுத்திய திட்டம்தான். மத்திய கர்நாடகாவுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

துணை முதல்வர் சிவகுமார், மொத்த கர்நாடகாவின் துணை முதல்வரா அல்லது ராம்நகர், சென்னப்பட்டணா, மாகடி, கனகபுரா, ஹாரோஹள்ளிக்கு மட்டும் துணை முதல்வரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ராம்நகருக்கு பெங்களூரு தெற்கு என, பெயர் சூட்ட முற்படுவது ஏற்புடையது அல்ல. வெறும் பெயரை மாற்றினால், வளர்ச்சி சாத்தியம் என்றால், கர்நாடகாவின் பெயரையே பெங்களூரு என, மாற்றுவது நல்லதுதானே. அப்போது கர்நாடகாவே முன்னேறும்.

ராம்நகரை பெங்களூரு மாநகராட்சியில் சேர்த்து, மாவட்ட பெயரை பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றினால் நில உரிமையாளர்களுக்கு லாபமாக இருக்குமே தவிர, சாதாரண மக்களுக்கு பயன் இல்லை. தங்களின் ஆதார் கார்டு உட்பட, மற்ற ஆவணங்களை திருத்தி கொள்ள, அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டி வரும்.

ராம்நகரை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தொழிற்சாலைகளை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தாருங்கள். ஹூப்பள்ளி - தார்வாட் இரட்டை நகரங்களை போன்று, ராம்நகர் - சென்னப்பட்டணா என, அறிவித்து மேம்பாட்டு பணிகளை செய்யலாம்.

ராம்நகர் மாவட்ட மக்களை முன்னேற்றும் எண்ணம், துணை முதல்வருக்கு இருப்பதாக தெரியவில்லை. அங்குள்ள நில உரிமையாளர்களுக்கு உதவி, தன் செல்வாக்கை அதிகமாக்க முயற்சிக்கிறார். இப்பகுதியின் பெரும்பாலான அரசியல்வாதிகள் 'லேண்ட் பேங்க்'காக உள்ளனர். இவர்களுக்கு உதவினால் வரும் நாட்களில், தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்பது, சிவகுமாரின் நோக்கமாகும்.

ராம்நகர், சென்னப்பட்டணாவை பெங்களூரில் சேர்க்கும் ஆலோசனையை கை விட வேண்டும். ஹூப்பள்ளி - தார்வாட் இரட்டை நகரங்களை போன்று, ராம்நகர், சென்னப்பட்டணாவை மேம்படுத்துங்கள்.

சமமான சமுதாயம் உருவாக்கும், நல்ல நோக்கம் கொண்டுள்ளதாக கூறும் முதல்வர் சித்தராமையா, பெங்களூரை மட்டும் மையப்படுத்தும் திட்டங்களை வகுத்து, ஏற்றத்தாழ்வுக்கு வழி வகுக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***





      Our Apps Available On




      Dinamalar

      Follow us