ADDED : ஜூலை 31, 2024 02:15 AM
நிலச்சரிவின் மையப் பகுதியான வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை பகுதியில் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, அதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை பெய்துள்ளது.
இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால், முதல் 24 மணி நேரத்தில் 20 செ.மீ.,யும், அதற்கு பின், 37 செ.மீ.,யும் பெய்துள்ளது. இதுவே, சேறும் சகதியும் கூடிய நிலச்சரிவுக்கு காரணம் ஆனது.