காலிஸ்தான் பயங்கரவாதி உதவியாளர்கள் 5 பேர் பஞ்சாப்பில் கைது
காலிஸ்தான் பயங்கரவாதி உதவியாளர்கள் 5 பேர் பஞ்சாப்பில் கைது
காலிஸ்தான் பயங்கரவாதி உதவியாளர்கள் 5 பேர் பஞ்சாப்பில் கைது
ADDED : ஜூன் 30, 2024 01:54 PM

சண்டிகர்: காலிஸ்தான் பயங்கரவாதி லக்பீர் லாண்டாவின் உதவியாளர்கள் 5 பேர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லக்பீர் லண்டா கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எல்லையில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த்மானின் வழிகாட்டுதலின்படி மாநிலத்தில் நடக்கும் குற்றங்களை ஒழிக்க போலீஸ் படை முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.