4 மடங்கு உயருது 'பார்க்கிங்' கட்டணம்
4 மடங்கு உயருது 'பார்க்கிங்' கட்டணம்
4 மடங்கு உயருது 'பார்க்கிங்' கட்டணம்
ADDED : ஜூன் 27, 2024 01:52 AM
புதுடில்லி:எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகரில் மாசுபாடு அளவு நிலை- இரண்டைக் கடக்கும்போது பார்க்கிங் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்துவதற்கான திட்டத்தை மாநகராட்சி முன்வைக்க வாய்ப்புள்ளது.
டில்லியை இணைக்கும் 13 முக்கிய சாலை நுழைவுப் பகுதிகளில் தானியங்கி சுங்கவரி வசூலிப்பு முறையின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான மற்றொரு முன்மொழிவும் நிர்வாக ஒப்புதலுக்காக கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இன்று மாநகராட்சியின் தலைமையகத்தில் நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.