போதைப்பொருட்கள் விற்பனை; நைஜீரியர் உட்பட 4 பேர் கைது
போதைப்பொருட்கள் விற்பனை; நைஜீரியர் உட்பட 4 பேர் கைது
போதைப்பொருட்கள் விற்பனை; நைஜீரியர் உட்பட 4 பேர் கைது
ADDED : ஜூலை 02, 2024 11:01 PM
பெங்களூரு : போதை பொருட்கள் கடத்தியதாக, இரண்டு நைஜீரியர்கள் உட்பட நான்கு பேரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 18.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருள், இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
வித்யாரண்யபுரா உட்பட பல பகுதிகளில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்திய போலீசார், நைஜீரியாவின் கானாவை சேர்ந்த சிரில், 23, இமானுவேல், 27, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து போதை பொருள், இரு சக்கர வாகனம் என 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரும், வேலை மற்றும் மாணவர் விசாவில் இந்தியாவுக்குள் வந்தனர்.
கோவா, மும்பை, டில்லியில் வசிக்கும், நைஜீரியாவை சேர்ந்தவர்களிடம் இருந்து போதை பொருட்களை குறைந்த விலையில் வாங்கி, இங்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுபோன்று, தொட்டகாலசந்திரா ஏரிக்கு பின் பகுதியில், போதை பொருளை விற்பனை செய்து வந்த விகாஷ், 23 என்பவரை கோனனகுண்டே போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து, 1.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பார்வதிபுரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வி.வி.புரத்தில் போதை பொருள் விற்பனை செய்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த ராசிக் குமார், 22, என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்தனர்.