மலையேற்றத்துக்கு 3வது வாரம் முன்பதிவு
மலையேற்றத்துக்கு 3வது வாரம் முன்பதிவு
மலையேற்றத்துக்கு 3வது வாரம் முன்பதிவு
ADDED : ஜூலை 03, 2024 05:23 AM

தட்சிண கன்னடா : ''மாநிலத்தின் பல்வேறு மலைகளில், மலையேற்றம் செல்பவர்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம், 3வது வாரத்தில் துவங்கும்,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நடப்பாண்டு ஜனவரி 26ம் தேதி குமாரபர்வதாவுக்கு மலையேற்றம் செய்ய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதுபோன்று இனி நடக்காத வகையில், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம், இம்மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து துவங்கும்.
பொதுவாக மழைக் காலத்தில், 'டிரெக்கிங்' செல்பவர்கள் ஆபத்தில் சிக்கிவிடக்கூடாது என்று மலையேற்றம் செய்ய தடை விதிக்கப்படும். எனவே, ஆகஸ்ட் மாதத்தில் மலையேற்றம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஏற்கனவே, மலையேற்றம் செய்வதற்கான பாதைகளை, சுற்றுலா துறை கண்காணித்து வருகிறது. முதல் கட்டமாக, குத்ரேமுக், நேத்ராவதி, கோடசத்ரி, குறுஞ்சல், கன்கடிகல், நரசிம்மா மலைகளில் மலையேற்றம் செய்ய, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சிலர், தனியார் சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் மலையேற்றும் செல்பவர்கள், வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பையை கொட்டுகின்றனர். இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க, சில முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கூறினார்.