ADDED : ஜூன் 08, 2024 04:33 AM

சிக்கமகளூரு, : பழத்தில் மயக்க மருந்து கொடுத்து, 34 குரங்குகள் கொல்லப்பட்டன.
சிக்கமகளூரு என்.ஆர்.புராவின் தியாவனா கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகம் இருந்தது. இதனால் வெறுப்படைந்த சிலர், குரங்குகளை கொல்ல முற்பட்டனர்.
நேற்று காலை வாழைப்பழத்தில் மயக்க மருந்து கலந்து வைத்தனர். இதை சாப்பிட்ட 30 குரங்குகள் மயங்கின.
அதன்பின், அவற்றின் மண்டையில் அடித்து கொன்று, சாலைக்கு கொண்டு வந்து போட்டனர்.
இவ்வழியாக சென்றவர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். 16 ஆண், 14 பெண், நான்கு குட்டி குரங்குகள் கொல்லப்பட்டிருந்தன.
போலீசார், கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் அங்கு வந்தனர். 'குரங்குகளை இரக்கம் இன்றி கொன்றவர்களை, கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்' என, பிராணி ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.