விளம்பர பலகை விழுந்து 3 வாகனங்கள் சேதம்
விளம்பர பலகை விழுந்து 3 வாகனங்கள் சேதம்
விளம்பர பலகை விழுந்து 3 வாகனங்கள் சேதம்
ADDED : ஆக 03, 2024 12:44 AM
தானே, மஹாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை இங்குள்ள தானே மாவட்டத்தின் டோம்பிவிலி, சஹஜானந்த் சவுக் பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியது.
இதில் திடீரென அங்கிருந்த மெகா சைஸ் விளம்பர பலகை விழுந்ததில், அதன் கீழே நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் நொறுங்கி சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முன்னதாக கடந்த மே 13ல், மும்பை காட்கோபர் பகுதியில் வீசிய புழுதி புயல் காரணமாக, பிரமாண்டமான இரும்பு விளம்பர பலகை பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில், 17 பேர் பலியாகினர்; 80 பேர் காயம் அடைந்தனர்.