அங்கன்வாடி மையங்களில் 22 முதல் எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,
அங்கன்வாடி மையங்களில் 22 முதல் எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,
அங்கன்வாடி மையங்களில் 22 முதல் எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,
ADDED : ஜூலை 15, 2024 05:33 AM

பெங்களூரு, : ''மாநிலத்தில் 250 அங்கன்வாடிகளில் வரும் 22ம் தேதி முதல் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., பாடம் துவக்கப்படும்,'' என மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில், 250 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., பாடம் வரும் 22ம் தேதி முதல் துவக்கப்படும். குழந்தைகள் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், பை, சீருடைகள் வினியோகிக்கப்படும்.
அத்துடன், அங்கன்வாடி ஊழியர்களுக்கு விரைவில் உயிர் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும். ஏற்கனவே, மாணவர்களுக்கு சத்தான உணவு, ஆசிரியைகளுக்கு சேலைகள் வழங்கப்பட்டு உள்ளன.
அங்கன்வாடி ஆசிரியைகளை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலான, அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.