கைதி ஆசனவாயில் 2 மொபைல் போன் பறிமுதல்
கைதி ஆசனவாயில் 2 மொபைல் போன் பறிமுதல்
கைதி ஆசனவாயில் 2 மொபைல் போன் பறிமுதல்
ADDED : ஜூலை 05, 2024 06:11 AM
பெங்களூரு: ஆசனவாயில் மறைத்து சிறைக்குள் கைதி கொண்டு செல்ல முயன்ற, இரண்டு மொபைல் போன்கள் சிக்கின.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், கொலை வழக்கில் கைதான ரகுவீர் என்ற கைதி அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக சிறையில் இருந்து, நீதிமன்றத்திற்கு நேற்று முன்தினம் அழைத்து செல்லப்பட்டார்.
விசாரணை முடிந்த பின்னர் மீண்டும் சிறைக்கு அழைத்துவரப்பட்டார். சிறைக்குள் செல்வதற்கு முன்பு, மெட்டல் டிடெக்டர் கருவி மூலம், ரகுவீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அப்போது மெட்டல் டிடெக்டர் கருவியில் சத்தம் கேட்டது. சந்தேகம் அடைந்த சிறை அதிகாரிகள், ரகுவீரை சோதனை செய்தபோது, ஆசான வாயில் மறைத்து வைத்திருந்த, இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நீதிமன்றத்தில் வைத்து அவரிடம் யாரோ மொபைல் போன்கள் கொடுத்தது தெரியவந்துள்ளது. அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போலீசாரிடமும் விசாரணை நடக்கிறது.