2 கன்வர் யாத்ரீகர்கள் விபத்தில் உயிரிழப்பு
2 கன்வர் யாத்ரீகர்கள் விபத்தில் உயிரிழப்பு
2 கன்வர் யாத்ரீகர்கள் விபத்தில் உயிரிழப்பு
ADDED : ஜூலை 26, 2024 08:41 PM
பிஜ்னோர்:உத்தர பிரதேச மாநிலம் அப்சல்கரில் நேற்று ஏற்பட்ட விபத்தில், கன்வர் யாத்ரீகர்கள் இருவர் உயிரிழந்தனர். .
புனித மாதமான சிரவண மாதத்தின் முதல் வாரத்தில், உ.பி., உத்தரகண்ட், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில சிவ பக்தர்கள், பாதயாத்திரையாக கங்கை நதிக்கு வந்து புனித நீர் எடுத்துச் சென்று, தங்கள் ஊரிலுள்ள சிவாலயங்களில் அபிஷேகம் செய்வர். இதுவே, கன்வர் யாத்திரை என அழைக்கப்படுகிறது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த 30 கன்வர் யாத்ரீகர்கள் ஒரு குழுவாக நேற்று, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
நேற்று மதியம் 2:30 மணிக்கு அப்சல்கர் அருகே எதிரில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், கன்வர் குழு மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
பைக்கில் சென்ற, 4 கன்வர்கள் துாக்கி வீசப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிவம்,24 மற்றும் அகிலேஷ், 22 ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.