Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தர்ஷன் பயன்படுத்தும் 2 துப்பாக்கி; பறிமுதல் செய்ய கமிஷனர் உத்தரவு

தர்ஷன் பயன்படுத்தும் 2 துப்பாக்கி; பறிமுதல் செய்ய கமிஷனர் உத்தரவு

தர்ஷன் பயன்படுத்தும் 2 துப்பாக்கி; பறிமுதல் செய்ய கமிஷனர் உத்தரவு

தர்ஷன் பயன்படுத்தும் 2 துப்பாக்கி; பறிமுதல் செய்ய கமிஷனர் உத்தரவு

ADDED : ஜூன் 27, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : கொலை வழக்கில் கைதாகி உள்ள நடிகர் தர்ஷன் பயன்படுத்தும், உரிமம் பெற்ற இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய, போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டுள்ளார்.

சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகரான ரேணுகாசாமி, 33 என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட 17 பேர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தர்ஷன், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, இரண்டு கைதுப்பாக்கிகளை, போலீஸ் அனுமதியுடன் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. லோக்சபா தேர்தலை ஒட்டி, துப்பாக்கி வைத்திருப்பவர்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், துப்பாக்கிகளை ஒப்படைப்பதில் இருந்து, முக்கிய பிரமுகர்களுக்கு விலக்கு அளிக்க முடியும். இதை பயன்படுத்தி, தர்ஷன் இரண்டு துப்பாக்கிகளையும் ஒப்படைக்காமல் இருந்துள்ளார். இதற்கு, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தாவிடமும் அனுமதி பெற்றுள்ளார்.

இந்நிலையில், தர்ஷன்கொலை வழக்கில் கைதாகி இருப்பதால், அவரிடம் இருக்கும் இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும்படி, வழக்கின் விசாரணை அதிகாரியான விஜயநகர் உதவி போலீஸ் கமிஷனர் சந்தனுக்கு, போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டார்.

இதையடுத்து, தர்ஷன் வீட்டிலிருந்து இரண்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்யும்படி, ஆர்.ஆர்.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, சந்தன் உத்தரவிட்டுள்ளார்.

கைதி எண்ணுக்கு கிராக்கி!


பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்ஷனுக்கு கைதி எண்ணாக 6106 கொடுக்கப்பட்டு உள்ளது. ரேணுகாசாமி கொலையாளிகளை, 'டி கேங்' என்று, ஊடகங்கள் சொல்கின்றன.

இந்நிலையில் டி கேங், கைதி 6106 ஆகிய தலைப்புகளில் படம் எடுக்க, கன்னட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அந்த இரண்டு தலைப்புகளுக்கும் டிமாண்ட் அதிகரித்து உள்ளது.

பல தயாரிப்பாளர்கள் தங்களது புதிய படங்களுக்கு, 'டி கேங், கைதி 6106' தலைப்பை பயன்படுத்த, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

தர்ஷனின் ரசிகர்களும் புதிதாக வாங்கும் வாகனங்களின் பதிவு எண்ணாக 6106 இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றனர்.

பெண் எஸ்.ஐ.,க்கு நோட்டீஸ்

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி உள்ள பவித்ராவை, கடந்த 15ம் தேதி ஆர்.ஆர்.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். வீட்டுக்குள் செல்லும்போது பவித்ராவின் முகம் வாடிய நிலையில் இருந்தது. ஆனால் வெளியே வரும்போது முகம் பளிச்சென இருந்தது. வீட்டில் அவர் லிப்ஸ்டிக், மேக்கப் போட்டது தெரிந்தது. இது, சர்ச்சைக்கு காரணமானது. இதையடுத்து, அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற விஜயநகர் போலீஸ் நிலைய பெண் எஸ்.ஐ.,யிடம விளக்கம் கேட்டு, மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரிஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us