ஒவ்வொரு மாதமும் 11 ரயில் விபத்துகள்: பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு
ஒவ்வொரு மாதமும் 11 ரயில் விபத்துகள்: பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு
ஒவ்வொரு மாதமும் 11 ரயில் விபத்துகள்: பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 18, 2024 10:52 AM

புதுடில்லி: பா.ஜ., ஆட்சியில் சராசரியாக ஒரு மாதத்தில் 11க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நடக்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
2014ம் ஆண்டுக்கு பிறகு நடந்த ரயில் விபத்துகள் குறித்து வீடியோ ஒன்றை எக்ஸ் சமூகவலைதளத்தில் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2014ம் ஆண்டுக்கு பிறகு, மோடி தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவில் சராசரியாக ஒரு மாதத்தில் 11க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நடக்கிறது.
பா.ஜ., அரசின் மோசமான கொள்கைகளால் ரயில்வே பேரழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த ரயில் விபத்துகளை தடுப்பதற்காக அரசு என்ன செய்கிறது?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.