எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் திடீர் விடுவிப்பு ஏன் ?
எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் திடீர் விடுவிப்பு ஏன் ?
எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் திடீர் விடுவிப்பு ஏன் ?
ADDED : ஆக 03, 2024 01:57 AM

புதுடில்லி; இந்திய எல்லை பாதுகாப்புபடை இயக்குனர் ஜெனரல், நிதின் அகர்வால், மற்றும் சிறப்பு இயக்குனர் ஜெனரல் (மேற்கு) ஓய்.பி. குரோனியா இருவரும் அப்பொறுப்பிலிருந்து நேற்று உடனடியாக விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், சர்வதேச எல்லையில் இருந்து ஊடுருவல் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதில் இருவரின் செயல்பாடுகளால் அதிருப்தி ,இருவரும் முறையான ஒருங்கிணைப்பு இல்லாமல் செயல்பட்டனர் என புகார்கள் வந்திருந்த நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் மீண்டும் மாநில கேடர் பொறுப்பிற்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.