ஹத்ராஸ் சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் ஆறுதல்
ஹத்ராஸ் சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் ஆறுதல்
ஹத்ராஸ் சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் ஆறுதல்
UPDATED : ஜூலை 05, 2024 10:12 AM
ADDED : ஜூலை 05, 2024 02:51 AM

ஹத்ராஸ்: உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டவர்களையும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இங்கு புல்ராய் கிராமத்தில் போலே பாபா ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் வெளியேறிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமுற்றவர்களை காங்.எம்.பி.,. ராகுல் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.