மதுபான கொள்கை வழக்கு: மணீஷ்சிசோடியா கோர்ட் காவல் நீட்டிப்பு
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ்சிசோடியா கோர்ட் காவல் நீட்டிப்பு
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ்சிசோடியா கோர்ட் காவல் நீட்டிப்பு
ADDED : ஜூலை 15, 2024 09:32 PM

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோர்ட் காவலை ஜூலை 22-ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது.
டில்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டினை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் நடந்துள்ள பண மோசடி வழக்கில் மணீஷ் சிசோடியா 2023ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமின் மனு கடந்த ஏப். 30-ம் தேதி தள்ளுபடியானது.
டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் அவரது கோர்ட் காவல் இன்று (ஜூலை 15) நிறைவடைந்ததையடத்து இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 22 ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.