ரூ.185 லட்சம் கோடியாக அதிகரிக்கும் மத்திய அரசின் கடன்
ரூ.185 லட்சம் கோடியாக அதிகரிக்கும் மத்திய அரசின் கடன்
ரூ.185 லட்சம் கோடியாக அதிகரிக்கும் மத்திய அரசின் கடன்
UPDATED : ஜூலை 29, 2024 10:46 PM
ADDED : ஜூலை 29, 2024 10:19 PM

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் கடன், 185 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 56.8 சதவீதமாக இருக்கும் என, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்து உள்ளார்.
லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:-கடந்த நிதியாண்டில், கடன் 171.78 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 58.20 சதவீதம்.
நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, 2021 - 22ல், மாநில அரசுகளுக்கு அளிக்கும் நிகர கடனுக்கான அதிகபட்ச வரம்பு, மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும், மூலதன செலவு அதிகரிப்பை சமாளிக்க, மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடன் வாங்கும் உச்சவரம்பு, 0.50 சதவீதமாக்கப்பட்டது.
இதற்காக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மூலதன செலவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.