Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ரம்ஜான் சிந்தனைகள்-21

ரம்ஜான் சிந்தனைகள்-21

ரம்ஜான் சிந்தனைகள்-21

ரம்ஜான் சிந்தனைகள்-21

ADDED : மார் 21, 2025 07:44 PM


Google News
Latest Tamil News
கட்டாயக் கடமை

நோன்பு காலத்தில் பிரதானம் தொழுகை. அதைப் போல ஏழைவரியும் கட்டாயக் கடமையாக உள்ளது. அதாவது நல்ல வழியில் வரும் பணத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்வதை இது குறிக்கும்.

நபிகள் நாயகம் இதுபற்றி கூறும் போது, 'எவர் ஏழைவரி (ஜகாத்) கொடுக்கவில்லையோ, அவர் தொழாதவர் போன்றவரே. அவர் நரக நெருப்பிற்கு ஆளாவார்' என்கிறார்.

ரம்ஜான் மாதத்தில்தான் இறைவனை மனதார தொழுகிறோமே... இரவு வணக்கங்களை அதிகரித்து விட்டோமே என சொல்லாமல், தர்மமும் செய்தால்தான் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும். அந்த தர்மமும் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் தெரியுமா...

பிறர் நம்மை பாராட்ட வேண்டும் என நினைத்து தர்மம் செய்யக் கூடாது. யாருக்கும் தெரியாமல் கொடுப்பதுதான் இறைவனை திருப்திப்படுத்தும். அதைப் போல 'நான் இவ்வளவு தர்மம் செய்தேன். என்னைப் போல் வேறொருவர் உண்டா' என தற்பெருமை பேசக்கூடாது. 'பிறர் பார்ப்பதற்காக தொழுபவன் இணை வைத்து விட்டான். பிறர் பார்ப்பதற்காக நோன்பு நோற்றவன் இணை வைத்து விட்டான். பிறர் பார்ப்பதற்காக தர்மம் செய்தவன் இணை வைத்து விட்டான்' என்கிறார்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us