
புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கிய மோகன்லால்
இந்த வீட்டின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 5 கோடி ரூபாய் ஆகும். மோகன்லாலுக்கு இது பெரிய தொகை இல்லை என்றாலும் ஒரு பெட்ரூமுள்ள சின்ன ஸ்டூடியோ வடிவிலான ஒரு வீட்டுக்கு மிகப்பெரிய விலையாகும். துபாய் மவுண்டன் கட்டிடம் மோகன்லாலுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதை பார்த்துக் கொண்டிருக்கும் படியான இந்த வீட்டை அவர் வாங்கி உள்ளார்.
தனிமையாக ஓய்வெடுக்க மட்டும் இந்த வீட்டை அவர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. துபாயில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் ஷாருக்கான் ஏற்கனவே ஒரு வீடு வாங்கி உள்ளார். மோகன்லாலுக்கு துபாயில் கடற்கரையில் ஒரு பங்களா இருப்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்இதெல்லாம் ஒரு பெருமையா, கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பம் மாதிரி ஒரு வேலையும் செய்யாமல் ஊழல்கள் லஞ்சங்கள் செய்து அதன் மூலம் இப்படி ஒரு வீடு வாங்கி காட்ட சொல்லுங்க பார்ப்போம்.