ADDED : ஜூன் 13, 2025 12:30 AM

நிதி கோரும் ஓப்பன் ஏ.ஐ.,
சாட் ஜி.பி.டி.,யின் 'ஓப்பன் ஏ.ஐ.,' தரவு மையங்களை அமைப்பதற்கு 3.40 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டலுக்காக, சவுதியின் பி.ஐ.எப்., எனப்படும் பொது முதலீட்டு நிதி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் எம்.ஜி.எக்ஸ்., உடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாட்டீல் ஆட்டோமேஷன் ஐ.பி.ஓ.,
மஹாராஷ்டிராவின் புனேவை தளமாகக் கொண்ட பாட்டீல் ஆட்டோமேஷன் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 69.61 கோடி ரூபாய் நிதி திரட்டுகிறது. இதற்கான பங்கு விற்பனை வருகிற 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஒரு பங்கின் விலை 114 முதல் 120 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பங்குதாரர்களின் பங்குகள் இன்றி, முழுதும் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்டப்பட உள்ளது.
எரிசக்தி சேமிப்பு வார மாநாடு
தொழில்துறை அமைப்பான இந்திய எரிசக்தி சேமிப்பு கூட்டணி சார்பில், புதுடில்லியில், வருகிற ஜூலை 8 முதல் 10ம் தேதி வரை 'இந்திய எரிசக்தி சேமிப்பு வாரம் 2025' என்ற தலைப்பில் 11வது மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட உள்நாட்டு பயணியர் கார் உற்பத்தியாளர்கள் மற்றும் சர்வதேச மின் வாகன உற்பத்தியாளர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.