
ஐபோன் பழுது நீக்கம்
இந்தியாவில் ஐபோன், மேக்புக் ஆகியவற்றுக்கான பழுது நீக்கும் சேவைகளை வழங்கும் பணியை டாடா குழுமத்திடம் அளிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஐபோன் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், பழுது நீக்கும் சந்தையை டாடா குழுமத்துக்கு ஆப்பிள் அளித்துள்ளது. இது, இந்தியாவில் நேரடியாக ஆப்பிள் தனது புதுப்பிக்கப்பட்ட ஐபோன் விற்பனையை துவங்க வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
அதானி வரி பங்களிப்பு
அதானி குழுமத்தின் உலகளாவிய வரி பங்களிப்பு, கடந்த நிதியாண்டில் 74,945 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் 58,104 கோடி ரூபாயை காட்டிலும் 29 சதவீதம் அதிகம். இந்த மொத்த வரி பங்களிப்பில், 28,720 கோடி ரூபாயை, அதானி என்டர்பிரைசஸ், அதானி சிமென்ட், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், பசுமை ஆற்றல் உள்ளிட்டவை வழங்கியுள்ளன.
டிரம்ப் - ஜின்பிங் பேச்சு
வர்த்தகப் போர் நீடிப்புக்கு இடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் தொலைபேசியில் நேற்று பேசினர். இருநாட்டு வர்த்தக விவாதம் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த டிரம்ப், ஷி ஜின்பிங் மிக கடுமையானவர், அவருடன் ஒப்பந்தம் ஏற்படுத்துவது கடினம் என கூறியிருந்தார். இந்நிலையில் பேச்சு குறித்து தன் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில், 'சீன அதிபருடன் பேசினேன், முற்றிலும் வர்த்தகம் தொடர்பாக பேசினேன், வேறு ஏதும் பேசவில்லை' என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
பெல் நிறுவனத்துக்கு ஆர்டர்
இந்திய ராணுவ கப்பல்களில் பயன்படுத்தப்படும், ஏவுகணை அமைப்பின் உதிரிபாகங்களை கொள்முதல் செய்ய, 2,323 கோடி ரூபாய் மதிப்பில் ஆர்டர்களை பெற்றுள்ளதாக, பொதுத்துறை