ADDED : ஜூலை 04, 2025 11:42 PM

7,557
நடப்பாண்டின் முதல் பாதியில், பின்டெக் எனப்படும் நிதி தொழில்நுட்ப துறையின் நிதி திரட்டல் 7,557 கோடி ரூபாயாக இருந்தது. இதையடுத்து, உலகளவிலான நிதி திரட்டலில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
இது, கடந்த 2024ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் திரட்டப்பட்ட 10,200 கோடி ரூபாயைவிட 26 சதவீதம் சரிவு என, சந்தை நுண்ணறிவு தளமான டிராக்ஸன் தெரிவித்துள்ளது.
1,37,000
நடப்பாண்டில், நாட்டின் மொத்த விளம்பர செலவுகள் 7.80 சதவீதம் அதிகரித்து, 1.37 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, மேக்னாவின் குளோபல் அட்வர்டைசிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் விளம்பரங்கள் 51 சதவீத பங்களிப்புடன், அச்சு, ஒலி, ஒளி வாயிலாக செய்யப்படும் விளம்பரங்களை முந்தியுள்ளன.
29,80,000
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி சற்று குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய் வினியோகத்தில் தொடர்ந்து ரஷ்யா முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய், கடந்த ஜூனில் நாளொன்றுக்கு 29.8 லட்சம் பேரலாக சற்று அதிகரித்திருந்தது. இது மே மாதத்தில், 26.3 லட்சம் பேரலாக இருந்தது.