
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் முந்தைய நாள் சரிவில் இருந்து மீண்டு, மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 769 புள்ளிகள் உயர்ந்து, 81,721 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 243 புள்ளிகள் உயர்ந்து, 24,853 புள்ளிகளாக இருந்தது. எனினும், நிகர அடிப்படையில் சரிவில் முடிந்தது.
இந்தியா- - அமெரிக்கா வர்த்தக உறவு தொடர்பான போக்கு, நாணய சந்தை ஏற்ற இறக்கம் உள்ளிட்ட அம்சங்கள் தாக்கம் செலுத்தின. எனினும், வலுவான நிதி நிலை முடிவுகள் மற்றும் வட்டி விகித குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள் மனநிலையில் தாக்கம் செலுத்தின.