Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ முன்னெச்சரிக்கையால் சரிவு

முன்னெச்சரிக்கையால் சரிவு

முன்னெச்சரிக்கையால் சரிவு


ADDED : அக் 30, 2024 08:52 PM

Follow on Google

ADDED : அக் 30, 2024 08:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன

• உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, வர்த்தகத்தின் ஆரம்பத்தில் குறியீடுகள் சரிவுடன் துவங்கின. பிற்பகல் வரை ஊசலாட்டம் நீடித்தது. இதனால், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்ட முதலீட்டாளர்கள், பங்குகளை விற்க துவங்கியதால், சந்தை குறியீடுகள் சரிவு பாதைக்கு திரும்பின

• நிப்டி குறியீட்டில், அதிகபட்சமாக வங்கித்துறை சார்ந்த பங்குகள் சரிவு கண்டன. சென்செக்ஸ் குறியீட்டில் 2,892 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும்; 1,040 நிறுவனங்களின் பங்குகள் குறைந்தும்; 79 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின

• அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் சற்று குறைந்திருப்பது ஆறுதலாக இருப்பினும், இரண்டாவது காலாண்டு முடிவுகள் கைகொடுக்காததால், சந்தையை முன்னெச்சரிக்கையுடன் முதலீட்டாளர்கள் அணுகுவதால், சந்தை எழுச்சி காண முடியாமல், திணறுவதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---4,614 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரு பேரலுக்கு 0.63 சதவீதம் சரிந்து, 71.57 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்து, 84.09 ரூபாயாக இருந்தது.



டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 அதானி என்டர்பிரைசஸ்

 ஹீரோ மோட்டோகார்ப்

 டாடா கன்ஸ்யூமர்

 பிரிட்டானியா

 மாருதி

அதிக இறக்கம் கண்டவை

 சிப்லா

 ஸ்ரீராம் பைனான்ஸ்

 எச்.டி.எப்.சி.,லைப்

 டிரென்ட்

 இன்போசிஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap