Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ முன்னெச்சரிக்கையால் ஏற்பட்ட சரிவு

முன்னெச்சரிக்கையால் ஏற்பட்ட சரிவு

முன்னெச்சரிக்கையால் ஏற்பட்ட சரிவு

முன்னெச்சரிக்கையால் ஏற்பட்ட சரிவு

முன்னெச்சரிக்கையால் ஏற்பட்ட சரிவு

ADDED : டிச 13, 2024 01:12 AM


Google News
Latest Tamil News
• வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன

• உலகளாவிய சந்தை குறியீடுகள் கலவையாக இருந்த நிலையில், ஆசிய சந்தைகளின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, இந்திய சந்தை குறியீடுகள் சிறிய ஏற்றத்துடன் துவங்கின

• சில்லரை பணவீக்க தரவுகள் குறித்த முன்னெச்சரிக்கையால், 'ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர்' உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகளை, முதலீட்டாளர்கள் விற்றதால், சந்தை குறியீடுகள் சரிவு பாதைக்கு சென்றன

• நிப்டி குறியீட்டில் ஐ.டி., உலோகம் தவிர, அனைத்து துறைகளும் சரிவைக் கண்டன. நுகர்பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, வாகனம், பொதுத்துறை வங்கி துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள் இறக்கம் கண்டன

• மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 1,479 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 2,518 நிறுவன பங்குகள் குறைந்தும்; 108 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 3,560 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.30 சதவீதம் அதிகரித்து, 73.74 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்து, வரலாறு காணாத வகையில் 84.87 ரூபாயாக சரிந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 அதானி என்டர்பிரைசஸ் பார்தி ஏர்டெல்

 இண்டஸ்இண்ட் பேங்க்

 டெக் மஹிந்திரா

 அதானி போர்ட்ஸ்

அதிக இறக்கம் கண்டவை

 என்.டி.பி.சி.,

 ஹிந்துஸ்தான் யுனிலீவர்

 கோல் இந்தியா

 ஹீரோ மோட்டோகார்ப்

 பி.பி.சி.எல்.,